சோழவந்தான் தனியார் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்

சோழவந்தான் தனியார் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்
X

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் எம் மருது பாண்டியன் தேசியக்கொடி ஏற்றினார்.

சோழவந்தான் தனியார் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் எம் மருதுபாண்டியன் தேசிய கொடியை ஏற்றி கொடிவணக்கம் செலுத்தினார். பின்பு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றிட வலியுறுத்தி பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர்.

இதில் பள்ளி நிர்வாகி வள்ளி மயில், எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா, பள்ளி முதல்வர் தீபாராகினி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!