மதுரை அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை..!

மதுரை அருகே  சாலையை சீரமைக்க கோரிக்கை..!

ஜல்லிக்கற்களுடன் காணப்படும் சாலை.

மதுரை அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை:

மதுரை மாவட்டம், பொதும்பு ஊராட்சியில், சாலையை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொதும்பு ஊராட்சியில் அகல்யா வீதியில், சாலையை சீரமைக்க கற்கள் கொட்டப்பட்டு, நான்கு மாதங்கள் ஆகியும்,சாலை பணிகள் மேற்கொள்ளாதால், அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து, அப் பகுதி மக்கள் பொதும்பு ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து, பொதும்பு கிராமத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ள சாலையை, துரிதமாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ,இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கற்கள் கொட்டிக்கிடப்பதால் வாகனங்கள் ஓட்டுவதற்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது சைக்கிளை ஓட்டமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் சைக்கிள் டயர் வீணாகிப்போகிறது. மேலும் அடிக்கடி பஞ்சர் ஏற்படுகிறது.

அதேபோல இப்பகுதியில் இருந்து வேலைக்குச் செல்வோர், மருத்துமனைக்குச் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் இதற்கு உடனடி தீர்வு கண்டு சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story