கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
X

பைல் படம்.

அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியில் கழுத்தறுத்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடல் வயல்வெளி பகுதியில் கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது

தகவலின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் பாண்டியன் வயது (39)என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் நண்பர்களுக்குள்மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து உடலை வயல்வெளியில் வீசிவிட்டு சென்றனறா என்ற கோணத்தில் அலங்காநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!