அலங்காநல்லூரில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூரில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை
X

ராஜீவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரசார்.

அலங்காநல்லூரில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும், கல்லணை ஒன்றிய கவுன்சிலர் மான சுப்பாராயலு தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் நகரத் தலைவர் சசிகுமார், நிர்வாகிகள் ஜெயமணி, பாலுச்சாமி, சரந்தாங்கி, முத்து, அன்பழகன், முத்துமணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்