மேலக்கால் கணவாய் கருப்பச்சாமி கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

மேலக்கால் கணவாய் கருப்பச்சாமி கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா
X

மேலக்கால் கணவாய் கருப்பணசாமி கோவிலில் ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பரிகார பூஜையில் திரளான பக்தர்கள்.

சோழவந்தான் அருகே மேலக்கால் கணவாய் கருப்பணசாமி கோவிலில் சிறப்பு யாகம், பரிகார பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயற்சி ஆவதை முன்னிட்டு.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் அருள்மிகு ஶ்ரீ மலையாண்டி அய்யனார் சுவாமி ஸ்ரீ கருப்பணசாமி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

இன்று காலை கணபதி பூஜையுடன் துவங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பக்தர்கள் மேல் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் மேலக்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், மதுரை மேலமடை தாசில்தார் நகரில் உள்ள சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும் ராகு கேது ப்ரீதி ஹோமங்களும், அபிஷேகமும் நடைபெற்றது.

Tags

Next Story
ai powered agriculture