சோழவந்தானில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பஜனை விழா

சோழவந்தானில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பஜனை விழா
X

சோழவந்தான் ரவுத்நாயக்கர் தெருவில் நடைபெற்ற பஜனை குழு.

சோழவந்தான் ரவுத்நாயக்கர் தெருவில் உள்ள பழமை வாய்ந்த பஜனைமடத்தில் புரட்டாசி மாதம் 2 வது சனிக்கிழமை பஜனை நடந்தது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரவுத்நாயக்கர் தெருவில் உள்ள பழமை வாய்ந்த பஜனைமடம் கொண்டல் ரவுத் பஜனை மடம். இந்த பஜனை மடத்தில், ஆண்டுதோறும் பல்வேறு பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில், புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிகிழமை முழுவதும் பக்தி பாடல்கள் இசையுடன் பாடி சோழவந்தான் நகரில் வலம் வருவது வழக்கம். இதேபோல், இந்த ஆண்டு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை காலை பஜனை மடத்தில் இருந்து பஜனைக் குழுவினர் இசையுடன் பக்தி பாடல்கள் பாடி வந்தனர். வழிநெடுக பக்தர்கள் அவர்களை வரவேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!