விழாக்காலங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் தேவை :பொதுமக்கள்

சோழவந்தான் மாரியம்மன் கோயில் பகுதி.
Public Request Ban Of Fire Crackers
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் ,அனுமதி இன்றி பட்டாசுகள் வெடிப்பதால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வர்த்தகர்கள் மற்றும் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இது சம்பந்தமாக சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகமும் காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,: சோழவந்தான் பகுதிகளில் விசேஷ நாட்களிலும் இறுதி ஊர்வலங்களிலும் தனியார் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை நகரின் முக்கிய வீதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் வெடிக்க செய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, மாரியம்மன் கோவில் பகுதிகளில், கார்த்திகை மார்கழி மாத விரதம் இருக்கும் பக்தர்கள் அதிக அளவில் காலை மாலை வேலைகளில் பஜனைக்காக வழிபாடுகளுக்காகவும் வந்து செல்லும் நிலையில், விழாக்கள் நடத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பட்டாசுகளை அதிக சத்தத்துடன் நகர் முழுவதும் வெடிக்கவிட்டு ஊர்வலமாக செல்வதும் இதற்காக போக்குவரத்தை ஆங்காங்கே தடை செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை சில தினங்களுக்கு முன்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பட்டாசு வெடித்ததில் தனியாருக்கு சொந்தமான வீட்டிற்குள் பட்டாசு துகள்கள் பட்டு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து வீடுகளுக்குள்ளும் பேப்பர் துகள்களாக நிரம்பி இருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் சிறு காயத்துடன் தப்பி இருந்தனர் . அதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதைத் தொடர்ந்து, இன்று காலையில இந்த பகுதியில் விழாக்களை நடத்துபவர்கள் பட்டாசு வெடித்தில்பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதனால் இது குறித்து, சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் அனுமதியின்றி பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அபராத விதித்து அதை முறைப்படுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர். காவல்துறையும் பட்டாசுகளை அதிக சத்தத்துடன் வெடிக்காதவாறு உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே, உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் இது சம்பந்தமாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி நகர் பகுதியில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது அபராதம் விதித்து அதனை முறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல், சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu