சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X

ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம்.

சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை வடக்கு மாவட்ட திமுக.சார்பில், சோழவந்தானில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சத்திரம் திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்தில் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பொதுக்கூட்டங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், சமீபத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் தமிழகமெங்கும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டதை அடுத்து மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவந்தானில் இன்று மாலை ஆறு மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் பொதுக் கூட்டம் என்பதால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவினர் கட்சித் தலைமையிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்வதால் தொண்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர் .

இதன் காரணமாக சோழவந்தான் நகர் முழுவதும் திமுக கட்சி கொடி பேனர் உள்ளிட்ட ஏற்பாடுகளை மிகுந்த ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!