அய்யங்கோட்டை ஊராட்சியில்சுகாதார சீர்கேடு ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

அய்யங்கோட்டை ஊராட்சி, நகரி பகுதியில்தேங்கி நிற்கும் கழிவு நீர். இதனால் தொற்று பரவாதா?..... அதிகாரிகள் நடவடிக்கை தேவை.
Public Demanded Collector அச்டின்
தமிழகத்தில் எப்போதுமே மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக எந்த இடத்திலும் நீர் தேங்க கூடாது. தேங்கிய நீரை அகற்ற வேண்டும், கழிவு நீரோடைகளை அவ்வப்போது தேங்கா வண்ணம் பார்த்து சுத்தம் செய்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை விதிமுறைகளை அரசு சார்பில் அறிவித்துள்ளது. அதுவும் தொற்று நோய்பரவும் காலத்தில் இவை ௨௪ மணி நேரமும் பணியாளர்களால் கண்காணிக்கப்படுவதும் வழக்கமான ஒன்று. ஆனால் ஒரு சில இடங்களில் எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் அதனை செய்யாமல் விடுவதால் பொதுமக்கள் இதனை உரிய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பின் பணியை முடிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சி நகரி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பல நாட்களாக தெருக்களில் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை காய்ச்சல் பாதிப்பு காரணமாகமருத்துவமனை செல்லும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருவதாகவும், தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, ஊராட்சி மன்ற த்
தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனால் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாகபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு டெங்கு மலேரியா போன்ற தீவிர நோய் தொற்று ஏற்படும் முன் ஊராட்சியில் உள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுகாதாரமான முறையில் மருந்து தெளித்தல் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்டவைகள் தெளித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் . ஊராட்சியில் ஒரு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu