மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நடைபெற்ற அன்னதான நிகழ்வை தொடக்கி வைக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணத் தொகையை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்கிட வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அதிமுக 50 ஆண்டுகால பொன்விழாவை முன்னிட்டு, திருவேடகம்,சோழவந்தான், மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, ஒன்றியச் கழக செயலாளர் கொரியர் கணேசன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் க. நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, நகரச் செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவேடகம் கிராமத்தில் கிளைச் செயலாளர் சிபிஆர் மணி தலைமையில், ஊராட்சிச் செயலாளர் பாலகுரு முன்னிலையில், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கிளை செயலாளர் சேது தலைமையில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் முன்னிலையில், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அம்மா பேரவை செயலாளர் ராஜபாண்டி தலைமையில், கிளைச் செயலாளர் கண்ணையா முன்னிலையில், பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மருத்துவ அணி மாவட்ட இணைச் செயலாளர் கருப்பையா தலைமையில், மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி மாவட்ட இணைச் செயலாளர் வனிதா, வழக்கறிஞர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சோழவந்தானில் முன்னாள் கவுன்சிலர்கள் துரை புஷ்பம், ராஜேந்திரன், சிலம்புச் செல்வம், பெருமாள், பொருளாளர் ராஜேந்திரன் முன்னாள் அவைத் தலைவர் கணேசன், மணி, ராமச்சந்திரன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் மகாலிங்கம், மாணவரணி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானத்தினை முன்னாள் அமைச்சரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தனராஜன், செல்லம்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் .கே. முருகேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டபாணி, நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி, தியாகு, கூட்டுறவு சங்க தலைவர்கள் மலைச்சாமி என்ற செழியன், முனியாண்டி ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையில் நமக்கு 48% தண்ணீர் கிடைக்கும். தற்போது, வளிமண்டல சூழ்ச்சியால் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருகிறது.
தற்போது, அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தண்ணீர் திறக்கப்பட்டு, இதன்மூலம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. தற்போது , சாலைகள் பாலங்கள் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது, பயிர்கள் சேதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ரப்பர் வாழை மற்றும் கால்நடைகளில் இழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஆகவே ,அரசு உரிய முறையில் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, அதிமுக 50 ஆண்டு பொன் விழா காண்கிறது ஆனால், காவல்துறை மூலம் ஆளும்கட்சி பல்வேறு அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றனர். அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இன்றைக்கு கழகக் கொடியினை ஏற்றுகிறோம். இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளார்கள். அதிமுக வெள்ளி விழா கண்டபோது அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து அம்மா மாபெரும் மாநாட்டை நடத்தி அதனை தொடர்ந்து ஆட்சியை பிடித்தார் . தற்போது, 50 ஆண்டு பொன் விழாவில் நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். விரைவில் மாநாடு நடத்தப் போகிறோம் இதன் மூலம் விரைவில் நாம் ஆட்சியை பிடிப்போம்.இந்த 5 மாத கால ஆட்சியில் திமுக எந்த திட்டம் நிறைவேற்றவில்லை .
202 திட்டங்கள் நிறைவேற்றிதாக கூறுகின்றனர். திட்டங்கள் எல்லாம் அறிவிப்போடு சரி ஆகமொத்தம் திமுகவின் தேர்தல் அறிக்கை காகிதபூ போன்றது காகிதப்பூ மணக்காது அம்மாவின் திட்டங்களை வழங்காமல், தொடர்ந்து மூடு விழா நடத்துகின்றனர். திமுக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை முறை ஆள் பிடித்தாலும், இந்த இயக்கத்தை முடக்கி விட முடியாது. அதிமுகவில் தொண்டர்கள் பஞ்சம் இருக்காது. ஆனால், திமுகவிற்கு பஞ்சம் வந்துவிட்டது. அதனால் தான் ஆள் பிடிக்கும் வேலையில் செய்கின்றனர் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu