அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

அரசு பொதுத்தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு
X

பாண்டியராஜபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்: மாணவிகளுக்கு பரிசு.

பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசுமேல் நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பரிசளிக்கப்பட்டது

அரசுப்பள்ளியில் பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசுமேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக அரசுபொதுதேர்வில் 10. 12வகுப்புகளில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்தவிழாவிற்கு, தலைமை ஆசிரியர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். சங்கத்தலைவர் கண்ணன்,துணைத் தலைவர்கள் செந்தாமரைக்கண்ணன், பரணிராஜா. பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ராமராஜ் வரவேற்றார். இந்த விழாவில், முதல்பரிசு சாலினி, சரவணக்குமார், இரண்டாம் பரிசு சுபஸ்ரீ,காவியா மூன்றாம் பரிசு கௌசல்யா, கோகுல் ஆகியோருக்கும் சிறப்பு பரிசாக கணக்கு பதிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவி கௌசல்யாவுக்கு வழங்கப்பட்டது.

இதில், சங்க நிர்வாகிகள் கமலபதி, காசிலிங்கம், ராஜேந்திரன், பாலசந்திரன்,ஜெயக்குமார், இன்னாசியர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை, இணைச் செயலாளர் லெட்கர்கான் தொகுத்து வழங்கினார்.முடிவில், உடற் கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது, படிக்கும் மாணவிகளை ஊக்கப்படுத்திய அமையும்.மாணவிகளும், பரிசுகளை பெற ஆர்வம் காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்


Tags

Next Story
ai healthcare products