சோழவந்தான் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலத்த காயம்

Bus Accident News | Accident Bus
X

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து.

Bus Accident News- சோழவந்தான் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலத்த காயமடைந்தனர்.

Bus Accident News- மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன், சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அனைவரையும் மீட்டு சோழவந்தான் மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, பேரூந்து ஓட்டுநர் ராஜ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!