சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
வாக்குப் பதிவின் போது ,மின் தடையால் அவதி.
சோழவந்தானில் 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் வாக்குப்பதிவில் தேக்கம் ஏற்பட்டது.
சோழவந்தான் :
தேனி நாடாளுமன்றம் சோழவந்தான் தனி தொகுதி சோழவந்தான் நகரில் 19 பூத்துக்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காலை சுமார் 8மணி அளவில் காமராஜர் சிலை அருகே ரோட்டின் குறுக்கே செல்லக்கூடிய மின்சார எர்த் வயர் திடீரென்று அறுந்து விழுந்தது இதனால் இரு பக்கமும் வரக்கூடிய வாகனங்களை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபிரகாஷ் எச்சரிக்கையில் நிறுத்தினார் இது தொடர்பாக மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது உதவி இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து விழுந்த மின் ஒயரை சரி செய்தனர் இதனால் சுமார் அரை மணி நேரம் மின்சார தடை பெற்றது ந
வாக்குப்பதிவு என்பதால் காமராஜர் பள்ளி மற்றும் ஆர்சி பள்ளியில் நடந்த வாக்குப்பதிவு இடத்தில் மின்சாரம் தடை பெற்றது இதனால் அங்குள்ள பணியாளர்கள் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச்சை வைத்து ஓட்டுப்பதிவு நடத்தினர் இதனால் அப்பகுதியில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது மின்சாரம் வந்தவுடன் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu