மதுரை அருகே சோழவந்தானில், திமுக எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து போஸ்டர்..!

மதுரை அருகே சோழவந்தானில், திமுக எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து போஸ்டர்..!
X

திமுக எம் .பி .ஆ.ராஜாவை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

சோழவந்தான் பகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவை கண்டித்து வெள்ளாளர், வேளாளர் உறவின் முறைசங்கம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சோழவந்தான் பகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவை கண்டித்து வெள்ளாளர் வேளாளர் உறவின் முறைசங்கம் சார்பில் சுவரொட்டிகள்.

சோழவந்தான்.

முன்னாள் மத்திய அமைச்சரும் ,நீலகிரி தொகுதி திமுக எம் பியு மான.ஆராசா சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை ஆகியோர்களை பற்றி அவதூறாக பேசியதாகவும் இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், திமுக தலைமை ,ஆ. ராசாவை கண்டிக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சோழவந்தான் அனைத்து வெள்ளாளர் வேளாளர் உறவுமுறை சங்கம் சார்பில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவைக் கண்டித்து, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதில், கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் வன்மையாக கண்டிக்கிறோம். தேசியத் தலைவர் இந்திய சுதந்திரத்திற்காக தனது சொத்து அனைத்தையும் அர்ப்பணித்த தமிழர் தந்தை ஐயா வ.உ சிதம்பரம் பிள்ளை, வரலாற்றுப் பிழை பேசிய தேசத் துரோகி ஆ ராசாவை வன்மையாக எச்சரிக்கிறோம். போராடத் தூண்டாதே இவன் அனைத்து வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கம் சோழவந்தான் என்ற போஸ்டர் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமப் பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business