சோழவந்தான், முள்ளி பள்ளம் இளங்காளியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா..!

சோழவந்தான், முள்ளி பள்ளம் இளங்காளியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா..!
X

சோழவந்தான் அருகே, முள்ளிப்புள்ளம் இளங்காளியம்மன் பூச்சொரிதல் விழா.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் ஆடிப்பெருந் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அருண் பிரசாத் குடும்பத்தினர் சார்பாக, பூச்சொரிதல் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை, ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

கிராம முக்கியஸ்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். தொடர்ந்து,இளங்காளியம்மனுக்கு, பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இன்று இரவு முள்ளிப்பள்ளம் கிராமத்தார்கள் சார்பாக, முளைப்பாரி ஊர்வலம்மற்றும் நையாண்டி மேளம் நடைபெற உள்ளது.

இளங்காளியம்மன் பக்தர்களுக்கு வேண்டிய வரம் தருவாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களும் இளங்காளியம்மன் ஆலயத்துக்கு வருகை தருவது வழக்கம். இன்னும் சிலர் திருமணம் நடக்கவேண்டி நேர்த்திக்கடன் வைப்பதும் உண்டு.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு