மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது காவலர் பலி

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது காவலர் பலி
X

உயிரிழந்த காவலர் சரவணன்

மதுரை கீழவெளி பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு:

மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்தபோது, மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். அவருடன், பணியில் இருந்த மற்றொரு காவலரான கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு நேரம் நடந்த சம்பவம் பொதுமக்கள் யாரும் அதிக அளவில் இல்லை எனவே, மதுரையில் பல்வேறு இடங்களில் இது போன்ற பழைய கட்டடங்கள் உள்ளது. இதுபோன்ற கட்டிடங்களை, கண்காணித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story