மதுரை அருகே பாலமேடு ஜல்லிக்கட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயம்

மதுரை அருகே பாலமேடு ஜல்லிக்கட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயம்
X

பாலமேடு ஜல்லிக்கட்டுப்போட்டியில் உறுதி மொழி ஏற்பு.

நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் காயம் அடைந்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் பாதுகாப்பான ஜல்லிக்கட்டு நடைபெற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் சேகர் தலைமையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் எடுத்து கொண்டனர்.

தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகர்க், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பின்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உட்பட பலர் உடன் கலந்துகொண்டார்.

இதையடுத்து, மதுரை அருகே பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. காளைகள் பல சீறிப்பாய்ந்தன. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் இருந்த நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் காயம் அடைந்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!