சிமெண்ட் சாலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

சிமெண்ட் சாலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
X

சோழவந்தான் அருகே சேதப்படுத்தப்பட்ட சிமெண்ட் சாலை.

சோழவந்தான் அருகே சிமெண்ட் சாலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மார் நாட்டான்.இவர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், முள்ளி பள்ளம் கிராமத்தில் விவசாய நிலங்களை தனியார் ஒருவர் மனைகளாக மாற்றி விற்று விட்டார் என்று தெரிகிறது.மேலும் ,அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையையும் சேதப்படுத்தியுள்ளார். மேலும், அவரது இடத்தில் கம்பி வேலி போட்டு அமைத்துள்ளார். இதனால், அந்தப் பகுதி பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள்.

எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளை அனுப்பி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுயுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!