வாடிப்பட்டி அருகே கோயில் திருவிழா: அனைத்து சமுதாய வழிபட வட்டாட்சியரிடம் மனு
வாடிப்பட்டி அருகே, கோயில் திருவிழா குறித்து வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்த கிராம மக்கள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, மேட்டு நீரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் வைகாசி திருவிழாவில் பல ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் ஒருகிணைந்து ஒற்றுமையோடு திருவிழா வழிபாடு செய்து வந்தனர்.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு கோவில் மரியாதை என்ற பெயரில் சாதியை சொல்லி அழைத்து விபூதி கொடுத்து வருவதை ஒன்றுக்கு மேற்ட்ட மாற்று சமூதாய பிரிவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கிராம த்தில் உள்ள சமூதாயங்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழல் நிலைவியதால், கடந்த 17./5.2023 அன்று வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தபோது முடிவு எட்டப்படாததால், திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. ஒரு பிரிவினர் திருவிழா நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் துர்க்கையம்மன் கோவில் வைகாசி திருவிழா நடத்த வேலைகளை ஆரம்பித்து உள்ளதாக கூறி மற்றொரு பிரிவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50.க்கு மேற்பட்டோர் இன்று வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று வட்டாட்சியர் மூர்த்திடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
மனுவில், எங்கள் ஊரில் ஏழு சமுதாய பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . ஊரில் உள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் வைகாசி திருவிழாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவுனர் தங்கள் முதல் மரியாதை என்ற பெயரில் மற்ற சமுதாய மக்கள் மத்தியில் ஜாதி எண்ணத்தை விதைக்கிறார்கள். இதனால், துர்க்கை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் அனைத்து சமுதாய மக்களும் உரிமை செய்து ஒற்றுமையோடு முதல் மரியாதை ஒன்று இல்லாமல், வைகாசி திருவிழாவை நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்ற முடிவுக்கு பின்னால் திருவிழா குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மனு அளித்தவர்களிடம் வட்டாட்சியர் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu