பெரியாறு பாசனக் கால்வாயை சீரமைக்க வேண்டும்
பெரியாறு பாசனக்கால்வாயைசீரமைக்க வேண்டும்: மூவேந்தர் முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்றகழக மதுரைவடக்குமாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத் திற்கு, மாவட்டச்செயலாளர் செந்தில்பாண்டி தலைமை வகித்தார். தெற்குமாவட்டச்செயலாளர் எம்.எம்.கே.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார்.
ஒன்றியத்தலைவர் கருப்பையாசெழியன் வரவேற்றார். இந்தகூட்டத்தில், மாநிலப்பொருளாளர் கே.என்.நாகராஜன், தென்மண்டலத்தலைவர் குஷின் செந்தில், மாவட்டத்தலைவர் எம்.கே.கணேசன் ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில், ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் வையாபுரி, சோழவந்தான் நகர துணைச்செயலாளர் சாமிநாதன், அலங்கை ஒன்றிய துணைச்செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார், தொழிலாளர் அணிநகர செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அக்.27ல், காளையார்கோவில் மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, அக்.28ல், கும்பகோணத்தில் நடைபெறும் தேவர்சிலை திறப்பு விழா, அக்.29 மாரியப்பவாண்டையார் நூற்றாண்டு விழா, அக்.30 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி ஆகிய விழாக்களுக்கு சென்று வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. சிறுமலை வனப்பகுதியில் தெத்தூர் கரடிக் கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறைச்சாலை அமைக்ககூடாது.
அந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும், சாத்தையாறு அணையை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், பருவ மழை வருவதையொட்டி, மழைநீர் சேகரிக்க ஏரி, ண்மாய், குளங்களில் சீமைக்கருவேல முட்களை அகற்றி ஷட்டர்களை பழுதுபார்த்து கரைகளை உயர்த்தி சீரமைக்கவேண்டும்.
பெரியாறு பாசனக் கால்வாயினை இருபோக சாகுபடி தண்ணீர் வருவதற்குள் மராமத்து பார்த்து செடி,கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும், மேட்டுநீரேத்தானில் பலமாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள வடிகால் அமைக்கும் பணியை மழைக்காலம் வருவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்டபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், ஒன்றியதுணைச்செயலாளர் கருப்புமணிவண்ணன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu