சோழவந்தானில், வீட்டின் சுற்றுச் சுவரை சேதப்படுத்திய கும்பல்: வைரல் ஆனதால் பரபரப்பு.
சோழவந்தானில் வீட்டின் சுற்றுச் சுவர் சேதப்படுத்திய சிசிடிவி காட்சி
சோழவந்தானில் தனியார் காம்பவுண்ட் கேட்டை சேதப்படுத்தி உள்ளே நுழைந்த கும்பல் வீடியோ வைரல் ஆனதால் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் மதுரை ரோட்டில் கோரமையான்பேட்டை என்ற இடத்தில் வசித்து வருபவர் ஜான். இவருக்கும் இவரது சகோதரி ஷகிலா மற்றும் மல்லிகா ஆகியோருக்கு இடையே இடம் தொடர்பான வழக்கு திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி கோர்ட்டுகளில் 2006 ஆண்டு முதல் நடந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஜான் மற்றும் அவரது சகோதரர்கள் அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், ஷகிலா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் கும்பலாக அடியாட்களுடன் வந்து கோரமையான் பேட்டையில் உள்ள இடத்தை கைப்பற்றும் நோக்கில் மண்வெட்டி மற்றும் கடப்பாறை ஆயுதங்களை கொண்டு இடத்தின் வீட்டின் முன்பாக ஒரு லட்சம் மதிப்புள்ள இரும்பு கேட்டை உடைத்தும், அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான கரி மூட்டைகளையும் வீசி எறிந்தனர். அங்கு இருந்த ஜானின் மருமகள்,பேத்தி, மற்றும் பணிப்பெண் ஒருவரை தகாத வார்த்தையால் திட்டி அவர்களை தாக்க முற்பட்டனர்.
ஜான் மற்றும் அவரது மகன் பசீர் அகமது கோர்ட்டுக்கு சென்றிருந்த வேலையில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியை பாதியில் விட்டு விட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து கடந்த 10ம் தேதி சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், சம்பவ இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி ஆதாரத்தை கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைன விடுத்தனர்.
சோழவந்தானில் தனியார் இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் அடியாட்களுடன் வந்து காம்பவுண்ட் கேட்டை உடைத்துஅத்து மீறி உள்ளே நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து, காவல்துறை முறையாக விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu