சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் புகார்

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் புகார்
X

சோழவந்தான் அருகே முள்ளிப்  பள்ளத்தில், வீணாகும் குடிநீர்.

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக குடிநீர் குழாய் உடைப்பு எடுத்து குடிநீர் வீணாக செல்கிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் அரசு மேல் நிலைப்பள்ளி முன்பாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி கழிவுநீருடன் கலப்பதால், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக் கின்றனர் .

வைகை ஆற்றில் இருந்து முள்ளிப்பள்ளம் மற்றும் தென்கரை ஊராட்சி பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த குழாயானது, முள்ளிப்பள்ளம் அரசு மேல் நிலைப்பள்ளி முன்பு சாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறிய அருகில் 200 மீட்டர் தொலைவில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு தேங்குவதால், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக் கின்றனர்.

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து கேட்டால், தென்கரை ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் என்றும் தென்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், முள்ளிப்பள்ளம் ஊராட்சி நிர்வாகத்திற்கு வரும் குடிநீர் என்றும் மாறி மாறி பதில் சொல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால், கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

உலகம் முழுவதும் தண்ணீரை சேமிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!