சோழவந்தான் அருகே பென்னிகுக் பிறந்த நாள் விழா : அன்னதானம் வழங்கல்

மதுரை உசிலம்பட்டி அருகில் பென்னிகுயிக் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Penniquick Birthday Celebration
58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக, உசிலம்பட்டி தேவர்சிலை அருகில் கர்ணல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 183 வது பிறந்தநாள் விழா சமத்துவ பொங்கல் விழா சங்கத் தலைவர் ஜெயராஜ், செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. துணை செயலாளர் பொன் ஆதிசேடன் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அரசியல் பிரமுகர்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் வர்த்தக சங்கம் வணிகர் சங்கம் அனைத்து தொழிலாளர்கள் சங்கம் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் பொதுமக்கள் மற்றும் நீர் பயன் பெற கூடிய அனைத்து கண்மாய் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் நடைபெற்றது . பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.இறுதியாக, மாதரை கண்மாய்க்கு இது வரை தனி மதகு இல்லாமல் இருந்து வந்தது சங்கத்தின் பொறுப்பாளர்களின் முயற்சியோடு அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் புதிய மதகு வைக்கபட்டது.
இன்று அதில் தண்ணீர் திறக்க அரசு அதிகாரிகளும் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் டாக்டர் பிவி கதிரவன்எக்ஸ் எம்எல்எ , புதிய மதகு வழியாக மாதரை கண்மாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.கிராம மக்கள் சார்பாக அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் சங்கத் தலைவர் ஜெயராஜ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் பொன் ஆதிசேடன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu