வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வரிசையில் காத்து நிற்கும் அவலம்

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், நோயாளிகள் காத்திருக்கும் அவலம்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையானது, வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள50க்கும் மேற்பட்ட கிராமமக்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி வரும் சூழ்நிலையில் மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் போதிய அளவிற்கு இல்லாததால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், தினசரி காலை 7 மணிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இந்த மருத்துவமனையை விட்டால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், மதுரை செல்ல கால தாமதம் ஏற்படுவதுடன்நோய் தாக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் .
ஆகையால், தமிழகஅரசு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு போதிய பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பல்வேறு சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu