வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிஸ் கருவி பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
வாடிப்பட்டி அரசு மருத்துமனையில் டயாலிஸ் சிகிச்சை செய்யும் இயந்திரம் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் செயல்படும் டயாலிசிஸ் பிரிவில் ரெண்டு மிஷின்களை கொண்டு 14 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
கடந்த 2019ல் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு துவக்கப்பட்டது. அப்போதிருந்து நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடுமையான கொரோனா பாதிப்பு இருந்த காலகட்டத்தில் கூட இங்கு இந்த டயாலிசிஸ் சிகிச்சை தடையின்றி நடைபெற்றது தான் சிறப்பம்சம். இங்கு பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் முறையான பயிற்சி பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்களால் இந்த சிகிச்சை அளிப்பதிலும் கவனம் செலுத்த இயலாது .காரணம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பது தான் . அதனால் இங்கு பயிற்சி பெற்ற ஒரு டெக்னிசியன் மற்றும் இரண்டு மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள்தான் தொடர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஒவ்வொரு நோயாளியும் சராசரியாக மாதத்திற்கு எட்டு முறை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நோயாளியின் சிகிச்சைக்கு 4 மணி நேரம் தேவைப்படும். அதன்பின் அடுத்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முன்பு அந்த மிஷினை சுத்தப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் இரண்டு பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி செய்தால் நாளொன்றுக்கு நான்கு நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். கூடுதலாக ஓரிரு நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தால் பணியாளர்கள் பாடு திண்டாட்டம் தான். தொடர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை தவிர்க்க முடியாது என்பதால் இவர்கள் கூடுதலாக பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் இவர்களுக்கு மன சோர்வு ஏற்பட்டால் அது நோயாளிகளை தான் பாதிக்கும். இப்படி வேலை பார்க்கும் இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தான் சிகிச்சை பெற முடியும். அப்படி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக அரசு தரும் நிதியைக் கொண்டு தான் சிகிச்சைக்காக தேவைப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்களை வாங்க வேண்டும் . மேலும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் இந்த நிதியிலிருந்து தான் சம்பளம் வழங்கப்படுகிறது.
நீரழிவு நோயாளிகள் நேரடியாக இங்கு வந்து சிகிச்சை பெற முடியாது. முதல் கட்ட சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்களுடன் இந்த சிகிச்சையை ஏற்றுக்கொண்ட பிறகு அந்த நோயாளிகள் மற்ற அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 5 மெஷின்கள் உள்ளன. அதில் ஒன்று வேறு நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மற்ற நான்கும் நெகட்டிவ் மிஷின்கள் இது வேறு நோய் தொற்று இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது . இந்த அடிப்படையில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் 2 மிஷின்கள் திருமங்கலத்தில் 2 மேலூரில் 2 மெஷின்கள் உள்ளன .
ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் மேலூர்அரசு மருத்துவமனையில் நான்கு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் 27 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 14 நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகக்குறைவாக நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளுக்கும் ரெண்டு மிஷின் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் இரண்டு மிஷின் என்பது என்ன நியாயம்.
ஆகவே நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு மருத்துவத்துறை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக இரண்டு டயாலிசிஸ் மிஷின்களை வழங்க வேண்டும். அந்த மிஷின்களை நிறுவுவதற்கு தேவையான இடவசதி அந்தப் பிரிவில் உள்ளது. மேலும் இந்த மருத்துவமனைக்கு கூடுதலாக இரண்டு மிஷின்கள் வழங்கினால் அதற்காக இரண்டு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கிடைப்பதால் இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். அதனால் அவர்கள் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் . மாவட்ட மருத்துவ நிர்வாகம் கருணையுடன் இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu