சோழவந்தான் வடக்கத்தி, உச்சி மாகாளியம்மன் ஆலய பங்குனி திருவிழா

சோழவந்தான் வடக்கத்தி, உச்சி மாகாளியம்மன் ஆலய பங்குனி திருவிழா
X

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ வடக்கத்தி காளியம்மன் திருக்கோவில் பங்குனிஉற்சவ விழா பால்குடம் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.

சோழவந்தான் வடக்கத்தி, உச்சி மாகாளியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் ஸ்ரீ வடக்கத்தி காளியம்மன் பங்குனிஉற்சவ விழா கடந்த ஐந்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆறாம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இன்று காலை, வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம், பால் குடம் எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது. குலவையிட்டு சாமியாடி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர், சந்தனம், நெய், வெண்ணை உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி .எம். குழுமத் தலைவர் மணி முத்தையா, 8வது வார்டு திமுக கவுன்சிலர் மருதுபாண்டியன், 13வது வார்டு கவுன்சிலர் எம். வள்ளிமயில் மற்றும் பூ மேட்டுத்தெரு கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story