பாலமேடு பத்ரகாளியம்மன் காேவில் பங்குனி பாெங்கல் திருவிழா

பாலமேட்டில் பிரசித்தி பெற்ற இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அன்னை பத்ரகாளியம்மன் மாரியம்மன்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் பிரசித்தி பெற்ற இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அன்னை பத்ரகாளியம்மன் மாரியம்மன்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது.
இதில் மாரியம்மனுக்கு சாட்டுதல் நிகழ்ச்சியும் அதை தொடர்ர்ந்து பத்ரகாளியம்மனுக்கு சாட்டுதல் தொடர்ந்து மாரியம்மன் கோவில் கொடியேற்றம் நடந்தது. அதன் பின்னர் நேர்த்தி கடன் இருந்தவர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். பின்னர் மங்கள இசை முளங்க முளைப்பாரி தண்ணீர் சொம்பு ஊர்வலம் வந்து கும்மி அடித்து அபிசேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் சக்தி கரகம் எடுக்கப்பட்டது. இரவு வாண வேடிக்கையுடன் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், மாவிளக்கு, கரும்பு தொட்டில் அங்கபிரதட்சனம், அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை மேளதாளம் முளங்க இரண்டு கோவில்களிலும் நேர்த்திகடன் செலுத்தினர். கடந்த 15 நாட்கள் நடந்த இந்த திருவிழாவையெட்டி சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார் உறவின்முறை தலைவர் எம்.எஸ்.எஸ்.கனகராஜ், செயலாளர் ஏ.கே.அருணசலவேல் பாண்டியன், துனை தலைவர் ஆர்.சி.சிவாஜி மற்றும் சங்க நிர்வாகிஸ்தர்கள் உறுப்பினர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu