வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்..!

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் கூட்டம்.
வாடிப்பட்டி யூனியனில் மராமத்து பார்க்க பள்ளிகட்டிடம் தேர்வு
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தனலெட்சுமி கண்ணன், யூனியன் கமிஷனர்கள் ரத்தின கலாவதி, கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) அரிமீனாட்சி வரவேற்றார். கணக்காளர் சங்கர், தீர்மான அறிக்கை வாசித்தார். இந்தகூட்டத்தில், பொதுநிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சிப் பணித்திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி விரிவான ஆலோசனை செய்யப்பட்டது. அட்னஹ் ஆலோசனை முடிவின்படி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான பள்ளிக் கூடக்கட்டிடங்கள் தேர்வுசெய்து மராமத்து பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், களமேற்பார்வையாளர்கள், வேளாண்மைதுறை, தோட்டக் கலைத்துறை, மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறுதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் (ஊரட்சிகள்)உமா நன்றிகூறினார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பழைய கட்டிடங்கள் மராமத்து செய்து புதுப்பிக்கப்படவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu