சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தென்கரை, முள்ளிப்பள்ளம், ஊத்துக்குளி , ரிஷபம் , நாராயணபுரம், மேலக்கால், குருவித்துறை, மன்னாடிமங்கலம், காடுபட்டி, இரும்பாடி, கருப்பட்டி, திருவேடகம் உட்பட 50 கிராம விவசாயிகளுக்கு விவசாயமே பிரதான நம்பிக்கையான தொழில்.
இப் பகுதியில், ஆடுதுறை 45, சின்னப்பொண்ணு, கல்சர் மாப்பிள்ளை சம்பா, போன்ற புதிய வகை குறுகிய கால நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு தொழில் செய்து வருகின்றனர். கிணற்றுப் பாசனத்தில் நெல் நாற்றங்கால் பயிர் செய்ய துவங்கி, பெரியாறு அணை வைகை அணைகளில் தண்ணீர் நிரம்பி திறப்பதை ஒட்டி கண்மாய் குளங்கள் நிரம்புவதை வைத்து விவசாயிகள் சுமார் 4000 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வந்தனர். நெற்கதிர் முற்றி அறுவடைக்கு ஆனவுடன் இடைத்தரகர்களால் மிகக்குறைந்த விலைக்கு நெல்லை விற்பதால், கடன் வாங்கி அடைக்க முடியாத அவல நிலையில் விவசாயிகள் மூழ்கினர்.
இதனால் சோழவந்தான் தென்கரை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி வலியுறுத்தினர். கோரிக்கையை தொடர்ந்து, தென்கரை பகுதியில் உடனடி நிலையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி நடவடிக்கை எடுத்தனர் .
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சோழவந்தான் தென்கரை கண்மாய் பாசன விவசாயிகள் சுமார் 4,000 ஏக்கர் நிலத்திற்கு மேல் நெற்பயிர் இட்டுள்ளோம். அறுவடைக்கு பின், நெல் தரகர்களிடம் வியாபாரிகளிடமும் 65 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 750 என்ற அடிமாட்டு விலைக்கு போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் கடன்இன்றி குடும்பம் நிம்மதியாக வாழலாம்.
ஆகவே, நீண்ட காலமாக கோரிக்கையான நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொடுத்து விவசாயிகளின் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவிய முதல்வர், அமைச்சர் மற்றும் விவசாய சங்கத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu