பலத்த மழையால், வாடிப்பட்டி அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் கவலை

பலத்த மழையால், வாடிப்பட்டி அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் கவலை
X

சோழவந்தான் அருகே மழையால் நீரில் மூழ்கிய நெல் வயல்

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடவு செய்த நெல் நாற்றுகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது

தொடர் மழையால், வயல்களுக்குள் புகுந்த மழைநீர் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நாற்றுக்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தில், முல்லைப் பெரியாறு பாசனத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி மூலம் இரண்டாம் போக நெல் நடவு செய்துள்ளனர். தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால், மழை நீர் வயல்களுக்குள் புகுந்ததால், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடவு செய்த நெல் நாற்றுகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது. உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு நாற்றுகள் நீரில் மூழ்கி உள்ள தகவலை கூறினோம். அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் ஒன்று சேர்ந்து வெளியேற்றி வருகிறோம் .

மேலும், அருகிலுள்ள ஓடையை தூர்வராததால், மழை நீரை வெளியேற்ற முடியவில்லை என்றும், விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்துள்ள நாற்றுகள் அனைத்தும் வீணாகி வருவதாகவும், இன்றைக்கு அதிகாரிகள் வந்து நீரை வெளியேற்ற விட்டால், நாளை அல்லது நாளை மறுநாள் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்த நாற்றுகள் அனைத்தும் அழுகும் நிலைக்கு தள்ளப்படும்.

இதனால், நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு பணம் வாங்கி நடவு செய்துள்ள நாங்கள் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும், ஆகையால் அரசு உடனே நடவடிக்கை எடுத்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆகையால் உடனடியாக, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை பாதுகாக்க அதிகாரிகளை அனுப்பி வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai and future cities