ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க உத்தரவு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி நடந்த சிறப்பு கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜீலான்பானு , இளநிலை உதவியாளர்கள் ராஜா, அபிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்தில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டை காண பார்வையாளர் களுக்கு மற்றும் காளைகள் விளையாடுவதற்கு மைதானம் அமைத்திட அனுமதி வழங்கிய தமிழக முதல்வர், வணகவரி துறை அமைச்சர் தொகுதி எம்எல்ஏ ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu