சோழவந்தானில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தானில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
X

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவு அணி மாவட்டச் செயலாளர் முருகேசன் பேசினார்.

மதுரை அருகே உள்ள சோழவந்தானில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் தொடர்ந்து பிரச்சினைகள் நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கிடையே, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தொடருவதாகவும் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலரை நீக்குவதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓ. பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்து இருவரும் தனித்தனியே அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஓ . பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாடிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் திரவியம் என்ற வீரபத்திரன் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் பொறுப்பாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது: கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தான். ஜெயலலிதா பல்வேறு கூட்டங்களில் பேசும்போது, விசுவாசத்தின் எடுத்துக்காட்டே அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜை விழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஜெயலலிதா எவ்வாறு தங்க கவசம் வழங்கினாரோ அதே போன்று ஓ. பன்னீர்செல்வமும் வெள்ளி கவசம் மற்றும் ருத்ராட்ச மாலையினை தேவர் திருமகனாரின் அறக்கட்டளையின் அறங்காவலர் காந்தி மீனாவிடம் வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்.

ஜெயலலிதா எந்த வழியில் மக்களுக்காக வாழ்ந்தாரோ அதேபோன்று ஓபிஎஸ் கட்சி தொண்டர்களுக்காக வாழ்ந்து வருகிறார் என முருகேசன் பேசினார். தொடர்ந்து, நிர்வாகிகள் தேர்வுக்கான மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில், பேட்டை விஜயன், புல்லட் மகேந்திரன், கல்லானை, மன்னாடி மங்கலம் தங்கபாண்டி, வழக்கறிஞர் முருகன், டீக்கடை ராஜேந்திரன், மார்க்கெட் ராஜேந்திரன், முத்து, பால்பண்ணை ராஜேந்திரன், கட்டக்குளம் வேலுச்சாமி, மன்னாடிமங்கலம் நாகஜோதி ,மேலக்கல் ஆடியராஜா, பாலகிருஷ்ணாபுரம் ஈஸ்வரன், நாகஜோதி, திருமால் நத்தம் தண்டபாணி ,மன்னாடி மங்கலம் செல்லம், கீழ மட்டையான் விஜயன் உட்பட சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business