மதுரை அருகே பாலமேடு பேரூராட்சி யில் சிறுவர் பூங்கா திறப்பு
பாலமேடு பேரூராட்சியில் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா, கழிப்பறை எம்எல்ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்
பாலமேடு பேரூராட்சியில் ரூ.29.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா, கழிப்பறை வசதி - எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடக்கி வைத்தார்:
மதுரை மாவட்டம் ,பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள மஞ்சமலை நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய கழிப்பறை வசதி மற்றும் பேரூராட்சி அருகே உள்ள வேளார் தெருவில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன் சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திருந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை வகித்தார்.
துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, திமுக மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், இளைஞரணி சந்தனாகருப்பு, அணி அமைப்பாளர்கள் யோகேஷ், தவசதிஷ், ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu