சோழவந்தானில் சிசிடிவி காமெரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சோழவந்தானில் சிசிடிவி காமெரா கண்காணிப்பு  கட்டுப்பாட்டு  அறை திறப்பு
X

 மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர் பகுதிகளை சிசிடிவி கேமரா மூலம்  கண்காணிக்கும் பணியை டிஐஜி பொன்னி தொடக்கி வைத்தார்

தொடங்கி வைத்தார்:

சோழவந்தான் நகர்ப்பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் காவல் நிலையத்துடன் இணைத்து போலீஸார் கண்காணப்பர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோழவந்தான் கடைவீதி பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில் சந்நிதி, வட்ட பிள்ளையார் கோவில் வைகை ஆற்றுப் பகுதி மற்றும் சோழவந்தானின் விரிவாக்க பகுதிகள் உள்ளிட்டவைகளில் சோழவந்தான் காவல் நிலையத்தின் சார்பாக சுமார் 40க்கு மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை தடுக்க உதவும் வகையில் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறையை டிஐஜி பொன்னி தொடங்கி வைத்தார்

பின்னர் டிஐஜி பேசியதாவது:சமீபகாலங்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் நகரில் நடைபெற்ற சிறு சிறு குற்ற சம்பவங்களை சிசிடிவி கேமரா மூலம் சோழவந்தான் காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தனர்.இதன் விளைவாக பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சோழவந்தான் காவல் நிலையத்தின் சார்பாக சோழவந்தான் நகர்ப்பகுதிகளில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி அவைகளை காவல் நிலையத்துடன் இணைத்து காவல்நிலையத்தில் இருந்தவாறு குற்ற சம்பவங்களை தடுக்க உதவும் விதமாக தொடங்கப்பட்டது என்றார்.

நிகழ்ச்சியில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சோழவந்தான் அருகே ராயபுரத்தில் தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகை தொடங்கி வைத்து மாணவ மாணவிகள் குற்றச் சம்பவங்களிருந்துதங்களை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். இதன் மூலம் வரும் காலங்களில் பெரும்பாலான குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்று வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சோழவந்தான் போலீசாருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர் .

Tags

Next Story