வாடிப்பட்டி அருகே பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு
பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்
பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, சாணாம்பட்டியில், பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், பால்வளத்துறை அதிகாரிகள் டி. ஆர். ஓ. செல்வம், துணை மேலாளர் சிவகாமி , செயல் அலுவலர் செல்வம் மற்றும் ரவிச்சந்திரன் பால் கூட்டுறவு சங்கத்தில் உள்ளகுளிர் ஊட்டப்பட்ட பால் மற்றும் தீர்மானம், வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களிடம் ஒரு நாளைக்கு சில்லறை விற்பனையாக எவ்வளவு பால் விற்பனை செய்யப்படுகிறது என்றும் ஆய்வு செய்தனர்.
ஒரு நாளைக்கு 160 லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பால் விலை 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பால் கூட்டுறவு சங்கத்தில் 88 பயனாளிகள் உள்ளனர் .
தினமும் குறைந்தது 1200 லிட்டர் முதல் 1400 லிட்டர் வரை பால் வாங்கப்படுகிறது. அரசு ஒரு லிட்டர் பாலின் விலை 34.25பைசா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.25 பைசா மட்டும் அலுவலக பணியா ளருக்கு மாத ஊதியம் கொடுக்கப்படும் மீதம் 33 ரூபாய் பால் ஊற்றும் பயனாளிகளுக்கு கொடுக் கப்படுகிறது என்றும், சில்லறை விற்பனையில் விற்கப்படும் 7ரூபாய் லாபம் பணத்தை பயனாளிகளுக்கு தீபாவளி போனஸ் ஆகவும் அலுவலக செலவிற்கும் எடுத்துக் கொள்வோம் என்றும் கூறினர்.
பால் ஊற்றும் பயனாளி சிவசாமி என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, பால் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பால் ஊற்றி வருகிறேன். 100-க்கு மேற்பட்டோர் பால் பண்ணையில் 2200 லிட்டர் முதல் 2000லிட்டர் வரை பால் ஊற்றி வந்தனர். தற்போது 88 பயனாளிகள் மட்டுமே இருக்கின்றனர்.
தற்போது, 1400 லிட்டர் மட்டுமே பால் ஊற்றப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பால் விலை 32 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறார்கள். சில்லறை விற்பனை செய்யும் போது தண்ணீர் கலந்து பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற பணியாளர் 15 ஆண்டுகள் முடிந்த பின்பும், பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அலுவலகத்தில் பணியாள் இல்லை என்றால், அரசுக்கு பரிந்துரை செய்து புதிதாக பணியாளரை தேர்வு செய்து அமைக்கலாம் என்றும், தீபாவளி போனஸாக கடந்தாண்டு எனக்கு 5 காசு முதல் 7 காசு வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளுக்கு முன்பு பால் கறவை மாடு வாங்குவதற்கு அரசு உதவியுடன் பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வந்துள்ளது.
அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு, ஒரு சில நபர்கள் பால் கறவை மாடு வாங்காமல் வங்கியில் வாங்கிய கடனுக்கு பணம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பால் கூட்டுறவு சங்கத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனை தடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu