வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு; பயணிகள் கடும் அவதி

வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு; பயணிகள் கடும் அவதி
X

நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்.

வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் சமீபத்தில் கடைகள் புதுப்பித்து கட்டப்பட்டன. அந்த கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு, அனுமதி பெற்றவர்கள் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

உரிமம் வழங்கும் போது அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகளில் உட்பகுதியில் மட்டும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து கொள்ளத்தான் அனுமதிக்கப்பட்டது . ஆனால், எந்த கடைக்காரர்களும் அந்த விதியை பின்பற்றவில்லை. பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், பயணிகள் வந்து செல்லும் நடைபாதை பகுதிகளில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், ஒதுங்குவதற்கு கூட இடமின்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் கடைக்கு முன்பாக ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் பாதுகாப்பாக தங்கி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs