பத்திரிகை,ஊடகங்களில் செய்தி வெளியானது: சாலையை சீரமைத்த அதிகாரிகள்..!

பத்திரிகை,ஊடகங்களில் செய்தி வெளியானது: சாலையை சீரமைத்த அதிகாரிகள்..!
X

சீரமைக்கப்பட்டு சாலை.

புத்திய தார்சாலை அமைத்து ஒரே வாரத்தில் சாலை உடைந்ததால் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. உடனே அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர்.

பத்திரிக்கையில் செய்தி வந்ததன் எதிரொலியாக சேதமடைந்த புதிய தார் சாலையை சரி செய்த அதிகாரிகள்:

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை புதிய தார்சாலை அமைத்த நிலையில் முறையாக சாலை அமைக்காததால்,ஒரே வாரத்தில் புதிய தார் சாலையானது பெயர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேதமடைந்த புதிய தார் சாலையின் படங்கள் வீடியோக்கள் செய்தி தால்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியான நிலையில், சேதமடைந்த தார் சாலை பகுதியினை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சரி செய்தனர் .

அப்போது பொதுமக்கள் கூறுகையில்: தார்சாலை அமைக்கும்போது முறையாக போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. சாலை அமைத்து ஒரே வாரத்தில் பெயர்ந்து பத்திரிகைகளில் செய்தி வந்த நிலையில்,அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மீண்டும் தார் சாலை அமைத்தது வேதனைக்குரியதாக உள்ளது. இனிவரும் காலங்களிலாவது,இது போன்ற பணிகளை தரமான பொருட்களைக் கொண்டுசெய்ய வேண்டும் இல்லையென்றால் , அரசுக்கு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என, தெரிவித்தனர்.

யோசியுங்கள் மக்களே..

புதிய தார் சாலை போட்டு ஒரே வாரத்தில் சாலை உடைந்து போகிறதென்றால், அந்த சாலி எந்த அளவு தரமானதாக போடப்பட்டிருக்கும். இதே அதிகாரிகள் அந்த சாலையை பரிசோதித்துத் தானே பில் பாஸ் பண்ணி இருப்பார்கள்? அப்பபோது அவர்களுக்கு தேய்வையானது வந்து சேர்ந்ததால் வையைப்பொத்திக்கொண்டி கையெழுத்துபோட்டுவிட்டு இன்று மீண்டும் யார் காசில் சாலையை சீரமைக்கிறார்கள்?

மக்களின் வரிப்பணம் வீணாவது யாரால்? அடிமட்டத்தில் இருந்து அதிகாரிகள் சரியாக பணிசெய்தால் மட்டுமே நமது அரசின் செயல்பாடுகள் சரியாக இருக்கும். இங்கே நாம் எதை திருத்துவது? எதை விடுவது? எல்லாமே ஊழலில் சிக்கிக்கிடக்கிறதே..? எல்லாமே ஊழல்மயம்.

மருத்துவமனை சென்றால் லஞ்சம், தாலுகா அலுவலகம் சென்றால் லஞ்சம், பத்திர பதிவில் லஞ்சம், உலகுக்கே பாடம் புகட்டும் கல்வித்துறையில் லஞ்சம், தள்ளாத வயதில் தடுமாறும் மூத்த குடிமக்களின் மாதாந்திர ஓய்வூதியம் வாங்க சான்றிதழ் கேட்டால் லஞ்சம்....ஐயகோ..எங்கு திரும்பினும் லஞ்சம்..லஞ்சம்..! எப்படி சுத்தம் செய்வோம்?

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!