அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் :நடவடிக்கை பாயுமா..?

அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் :நடவடிக்கை பாயுமா..?
X

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட முதிய பெண்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டுவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என, உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர் . சோழவந்தான் அரசு மருத்துவமனை மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதி செய்யப்படுவதில்லை என்றும கூறப்படுகிறது.

நோயாளிகளை அடிக்கடி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்வதாகவும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இங்குள்ள ஒரு சில மருத்துவ செவிலியர்கள் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைத்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும், தொடர்ச்சியாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால், சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காததால், அருகில் உள்ள மன்னாடிமங்கலம், மேலக்கால், வாடிப்பட்டி போன்ற அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.-

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு போதிய மருத்துவ பணியாளர்களை நியமித்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை சிகிச்சைக்கு வந்த வயது முதிய பெண்மணிக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உறவினர்கள் வாக்குவாதத்தில், ஈடுபட்ட பின்பு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, காலில் அடிபட்டு வந்த இளைஞருக்கு நடக்க முடியாத நிலையில் லேசாக காலில் கட்டு போட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இவ்வாறு நோயாளிகளை அலட்சியமாக நடத்துவதுடன் முறையான சிகிச்சை அளிக்காததால், இங்கு வரும் நோயாளிகளுக்கு நோய் முற்றி தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மருத்துவத்துறையில் அலட்சியம் காட்டுவது ஆபத்தானது. ஏதாவது விபரீதம் ஏற்படும் முன்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கவேண்டும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!