வாடிப்பட்டி அருகே இறந்தவரின் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்

வாடிப்பட்டி அருகே இறந்தவரின் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்
X

வாடிப்பட்டி அருகே இறந்தவரின் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்லும் மக்கள்.

வாடிப்பட்டி அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் வயல்வெளிக்குள் உடலை தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப் பட்டி அருகே, போடி நாயக் கன்பட்டி, மேல் நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு பரம்பரை பரம்பரையாக தனி சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு, கோட்டைமேடு, நரிமேடு இரண்டு கிராமங்களுக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த சுடுகாட்டுக்கு செல்ல ஏற்கெனவே பெரியார் பாசனக் கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி, உள்ள கரை ஓரமாக சென்று மாயனத்திற்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கிளைக் கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது, படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல், சமதளமாக பூசி விட்டதால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டு போனது.

இதனால் தற்போது நரிமேடு என்ற கிராமத்தின் சாலை வழியாக வயல்வெளிக்குள் செல்ல வேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பின்னும், தற்போது பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இறந்தவர்களின் உடல்களை வயல் பகுதிகளில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலை தொடராமல் இருக்க, விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி