/* */

மதுரை அருகே, வீணாக வெளியேறும், மாநகராட்சி குடிநீர். கண்டு கொள்வார்களா அதிகாரிகள்?

மதுரை அருகே, வீணாக வெளியேறும், மாநகராட்சி குடிநீர். கண்டு கொள்வார்களா அதிகாரிகள்?

HIGHLIGHTS

மதுரை அருகே, வீணாக வெளியேறும், மாநகராட்சி குடிநீர். கண்டு கொள்வார்களா அதிகாரிகள்?
X

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பகுதியில், மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு

வீணாகும் குடிநீர் அதிகாரிகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் காலனி அருகே வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த குழாய் ஆனது வைகை ஆற்றின் கரையோரப் பகுதியில் செல்லும் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி அருகில் உள்ள வயல் வெளிகளில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்குபலமுறை தகவல் கொடுத்தும் குடிநீர் குழாயின் உடைப்பை சரி செய்யாததால், தற்போது, வயல்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் உள்ளது.

மேலும், அருகில் உள்ள தென்னந்தோப்பு பகுதிகளில் தண்ணீர் பல நாட்கள் தேங்கிக் இருப்பதால் தென்னை மரத்தின் வேர்கள் அழுகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது, வெப்ப அலை வீசி வரும் நிலையில் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதால், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 April 2024 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!