உசிலம்பட்டியில், போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப் பொருள் விழிப்புணர்வு:
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே,அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா மற்றும் மாவட்ட மனநல மையம் இணைந்து சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா மற்றும் மாவட்ட மனநல மையம் இணைந்து சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் எம்.சுப்பிரமணியன், டாக்டர் சந்தோஷ்ராஜ், மனநல மருத்துவர் விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர். கலைமுருகன், சப்-இன்ஸ்பெக்டர். காசிமாயன் ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். , மலைப்பட்டி ,மருதம்பட்டி, பூச்சிப்பட்டி, பகுதிகளில், மாணவ, மாணவியர் பேரணியாகச்சென்று போதை ஒழிப்பு கோசங்களை எழுப்பினர்.
காவல்துறை சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்.பி.ஜ. தன்னார்வலர்கள் பங்கேற்றனர். , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழி, போதைப்பொருள் பாவனை குறித்த பேச்சு மற்றும் அவற்றின் தீங்கான முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியை ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி ஒருங்கிணைத்து நடத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu