அலங்காநல்லூர் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா

அலங்காநல்லூர் அருகே முத்தாலம்மன்  கோவில் திருவிழா
X

பாலமேடு முத்தாலம்மன் கோவில் திருவிழா சுவாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

பாலமேடு முத்தாலம்மன் கோவில் திருவிழா சுவாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

அலங்காநல்லூர் அருகே முத்தாலம்மன் ஆலய திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்தாலம்மன் கோவில் திருவிழா சுவாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மேளதாளம் முழங்க மறவபட்டி சென்று அம்மன் அழைத்து பாலமேடு கோவிலுக்கு வந்தது. பின்னர், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுத்தல், கிடாய் வெட்டுதல், உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகளுடன் ஊர்வலமாக முத்தாலம்மன் இருப்பிடம் போய் சேர்ந்தது.திருவிழா ஏற்பாடுகளை,தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம், இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!