அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் முளைப்பாரி திருவிழா

அலங்காநல்லூர் முனியாண்டி கோயிலில் முளைப்பாரி திருவிழா
X

 அலங்காநல்லூர் முனியாண்டி அய்யனார் முத்தாலம்மன் சுவாமி பங்குனி பொங்கல் விழாவிவ்  1000 க்கும் மேற்பட்ட முளைப்பாரியுடன்  உலா வரும்  பக்தர்கள்

Mulaypari Festival At Alankanallur Muniyandi Temple-அலங்காநல்லூர் முனியாண்டி அய்யனார் முத்தாலம்மன் சுவாமி பங்குனி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது

அலங்காநல்லூர் முனியாண்டி அய்யனார் முத்தாலம்மன் சாமி பங்குனி பொங்கல் உற்சவ விழா:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீமுனியாண்டி, அய்யனார் முத்தாலம்மன் சுவாமி பங்குனி பொங்கல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து, ஸ்ரீ முத்தாலம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 1000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து நேற்று இரவு வீதி உலா வரும் நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் ஆங்காங்கே நின்று அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.இதையடுத்து அம்மன் கோவிலை சென்றடைந்தது. பின்னர், பல்வேறு மலர்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் தீபாதாரனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டி எடுத்தால், பால்குடம், மற்றும் மாவிளக்கு எடுத்தல், உருண்டு கொடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த அவர்களுக்கு பூஜை மலர்களும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி முனியாண்டி கோவிலில், 200 -க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் செயல் அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை