வாடிப்பட்டி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட மேட்டுநீரேத்தான் கிராமக்கோயிலில் உடைக்கப்பட்ட உண்டியல்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டுநீரேத்தான் கிராமம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோயில் ஊரின் முகப்பு பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாகவே சிவன் கோயில் உள்ள இடங்களில் எல்லாம் துர்க்கை அம்மன் சந்நிதி இருக்கும் துர்க்கைக்கு என தனி ஆலயம் என்பது ஆசியாவிலேயே நான்கு இடங்களில் தான் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதில் ஒன்றுதான் இந்த திருத்தலம். இந்தக் கோயிலில் நேற்று இரவு சரியாக 12 .58 உள்ளே நுழைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் சந்நிதிக்கு முன்னால் உள்ள உண்டியலில் அடிப்பகுதியில் உள்ள கதவை உடைத்து பின் உண்டியலில் உட்புறத்தில் உள்ள தடுப்பையும் தகர்த்து எடுத்துவிட்டு உள்ளிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மஞ்சள் கலர் டி-ஷர்ட் மற்றும் ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்து இருக்கிறார். கண்களை தவிர்த்து முகம் முழுவதையும் தனியார் சுற்றி மறைத்திருக்கிறார். இந்தக் கோயில் ஊரின் முகப்பு பகுதியில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்து இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதே கோயிலில் ஏற்கெனவே இந்த சம்பவத்தையும் சேர்த்து மூன்று முறை இந்த உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.மேலும் இக்கோயிலில் இருந்த உற்சவர் சிலையும் ஒரு முறை திருடப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவும் பொருட்கள் மீட்கப்படவும் இல்லை என்பது தான் வேதனையான விஷயம் என்கின்றனர் . இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu