‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-முன்னாள் அமைச்சர் உதயகுமார்

‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-முன்னாள் அமைச்சர் உதயகுமார்
X

மதுரை அருகே சோழவந்தானில் தேர்தல் பிரச்சாரத்தில்  முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

பாஜக நடத்துவது ரோடு ஷோ அல்ல ஏமாற்று ஷோ என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 5 தினங்கள் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் கோடை வெயிலையும் மிஞ்சும் வகையில் அனல் பறக்கிறது.

இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் பேசியதாவது:-

பாஜகவினர் தமிழகத்தில் நடத்துவது ரோடு ஷோஅல்ல அது ஒரு ஏமாற்று ஷோ அண்ணாமலை டெல்லி தலைவர்களை ஏமாற்றுவதற்காக இங்கு ரோடு ஷோ நடத்தி ஆதரவு இருப்பது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்.ஏப்ரல் 19ஆம் தேதி மக்கள் இதற்கு விடை தருவார்கள்/

இவ்வாறு முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

இந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தொகுதி பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் உதயகுமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai automation in agriculture