வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு திட்ட வாகனத் தொடக்க விழா:

வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு திட்ட வாகனத் தொடக்க விழா:
X

வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட வாகன தொடக்க விழா

வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட மின்கல வாகனத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி யில் 18 வார்டுகளில் தினந்தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் வீடுகள் தோறும் சென்று சேகரிப்பதற்கு புஸ்காட் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் 20 மின்கல வாகனங்கள் வழங்கப் பட்டுள்ளது. இந்த வாகன சேவை தொடக்க நிகழ்ச்சி, தாதம்பட்டி நீரேத்தான் மந்தைத்திடலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி , முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி, துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துப் பாண்டி வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், வெங்கடேசன் எம்.எல்.ஏ., கொடி அசைத்து மின்கல வாகன சேவையை தொடக்கி வைத்தார். இதில், கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி,சரசு,பூமிநாதன், ஜெயகாந்தன், ஐ.கே.குருநாதன், சுசீந்திரன், மற்றும் தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், முரளி, வினோத், மருதுபாண்டியன், அரவிந்த், அலுவலக பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கார்த்திக் நன்றி கூறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா