மதுரை அருகே வாடிப்பட்டியில், அரசு சார்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

மதுரை அருகே வாடிப்பட்டியில், அரசு சார்பில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்
X

வாடிப்பட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் மூர்த்தி:

அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு 960 பயனாளிகளுக்கு ரூ.9.57 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

மதுரை மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார்பில்960 பயனாளிகளுக்கு ரூ.9.57 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை, சோழவந்தான் சட்டம்னற தொகுதிக்குட்பட்ட, வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள கிருஷ்ணா மகாலில், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பல்வேறு துறைகளின் சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூபாய் 9 கோடியே 57 இலட்சத்து 54 ஆயிரத்து 693 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு கடந்த 2 ஆண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 129172 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில், 125833 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு ரூ.40.34 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா இலவசப் பேருந்துப் பயணத்திட்டத்தின் மூலம் 31.24 கோடி மகளிர் பயனடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 36433 பயனாளிகளுக்கு ரூ.166.43 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது. 893968 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியுதவி ரூபாய் 4 ஆயிரம் வீதம் ரூபாய் 358 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மதுரை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள 72 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூபாய் 188 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 35000 கோடி ரூபாயும், விவசாயிகளுக்கு 40000 ஆயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இன்றை தினம் சென்னையில் தமிழ் கழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் , நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ,தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிட்டதின் அடிப்படையில் சோழவந்தான் சட்டம்னற தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி வட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டுள்ளது.

இந்தியாவில், இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்க வேண்டும் என்பதுதான் , தமிழ்நாடு முதலமைச்சர், எண்ணம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் அத்தொகையினை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்தநிகழ்வின்போது ,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி ,மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!