வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
X

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. 

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், பேருந்து நிலையம் அருகே மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின்படி, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மு காளிதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரது பெருமைகள் நினைவு கூறப்பட்டது.

இதில், நிர்வாகிகள் பாண்டியன், பரந்தாமன், ஜெயராமன், முத்துச்சாமி, மலைச்சாமி, ஜெயக்குமார், வீரபாகுதேவன், குழந்தைவேலன், பால்ராஜ், பாலன், கார்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி சந்திரபோஸ், மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள கிளை அதிமுக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!