மன்னாடிமங்கலத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த தினவிழா கொண்டாட்டம்

மன்னாடிமங்கலத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த தினவிழா கொண்டாட்டம்
X

மன்னாடி மங்கலத்தில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த தினவிழாவை, அதிமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அவருடைய திருவுருவப் படத்திற்கு, தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி மாலை அணிவித்தார். அவைத்தலைவர் பூசணி செல்வம் கொடியேற்றி வைத்தார் .

விவசாய அணி மாவட்ட நிர்வாகி கந்தன் இனிப்பு வழங்கினார். இதில், பாலு முதலியார், காமாட்சி, சக்திவேல், ஜெயலட்சுமி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி