மாணவர்களுக்கான மனநல ஆரோக்கிய கருத்தரங்கம்

மாணவர்களுக்கான மனநல ஆரோக்கிய கருத்தரங்கம்
X

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம்

அகத்தர உறுதி மையமும் மாணவர்கள் மனநல ஆலோசனை மையமும் இணைந்து மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது

விவேகானந்தா கல்லூரியில் மாணவர்களுக்கான மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் அகத்தர உறுதி மையமும் மாணவர்கள் மனநல ஆலோசனை மையமும் இணைந்து மாணவர்களுக்கான மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்கள் மனநல ஆலோசனை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லப்பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.

செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை, எம்.எஸ். செல்லமுத்து மனநிலை மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின் முதல்வர் முனைவர் குரு பாரதி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் கண்ணன் மாணவர்களுக்கான மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். வேதியல் துறை பேராசிரியர் முனைவர் கணபதி நன்றி கூறினார்.நிகழ்ச்சியை கணினித் துறை பேராசிரியர் ரஞ்சித் குமார் தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது